
பெண்ணே !
நீ பூலோகத்தில் பிறந்தவளோ அல்லது அந்த தேவலோகத்தில் பிறந்தவளோ என்று நான் அறியேன்.
நீ பூ போன்று மனம் கொண்டவளோ அல்லது அந்த பூவுக்கே மணம் தந்தவளோ என்று நான் அறியேன்.
நீ மலையில் வாழ்கிறாயோ அல்லது அந்த மலையில் பொழியும் மழையில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.
நீ வெயில் பிரதேசத்தில் வாழ்கிறாயோ அல்லது வெயிலின் பின் வரும் அந்த குளிர் பிரதேசத்தில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.
நீ நிலவில் வாழ்கிறாயோ அல்லது அந்த நிலவின் ஒளியில் வாழ்கிறாயோ என்று நான் அறியேன்.
ஆனால் இன்றோ ஒன்று மட்டும் நான் அறிகின்றேன்.
நீ என்றும் என் மனதில் வாழ்கிறாய் என் ஆருயிர் தோழியாய் !! தேவதையாய் !! என் காரிகையே !!
உன் காலடி தடம் பட்டால் அந்த பாலையும் சோலையாய் மாறிடுமல்லோ.
உன் குரலின் இசை கேட்டால் அந்த குயிலும் துயில் கொல்லுமல்லோ.
உன் விரல் நுனி பட்டால் என்னுள் உள்ள அந்த காயமும் மாயமாகிப் போகுமல்லோ.
உன் மூச்சுக்காற்று பட்டால் என் எழுத்தும் சிலிர்த்து போகுமல்லோ.
சிப்பிக்குள் முத்துப் போல்
நீரினுள் மீனைப் போல்
தேன் கூட்டினுள் தேனைப் போல்
முட்டைக்குள் கருவைப் போல்
என் இதயத்துள் உனை வைத்து காப்பேன் !! என் இறக்கை இல்லா தேவதையே !! உன் உயிர்ப் பாதுகாவலனாய்
என் இதயத்துள் நீ இருக்கும் இவ்வேளையில்
இருள் கண்டு பயமானால் கூறு !! அச்சூரியனை விளக்காய் செய்து தருகிறேன்.
தாகம் எடுத்தால் கூறு !! அக்கடலின் உப்பை பிரித்து பானையில் அடைத்து தருகிறேன்.
குளிரெடுத்தால் கூறு !! அவ்வானத்தை உனக்கு போர்வையாய் போர்த்தி வைக்கிறேன்.
வெருப்படித்தால் கூறு !! மேகத்தை பிழிகிறேன் !! அந்த மழை நீரை பிடிக்கிறேன் !! கப்பல் விடுவோம் இருவரும் காகிதத்தால் !!
வைகோவாய் இருந்த நான் இன்று
வைரமுத்தானேன் !! சைகோவாய் இருந்த நான் இன்று செந்தமிழ் பேசினேன் !! எல்லாம் உன்னால் !!
என்னென்ன வேண்டும் தயங்காமல் கேளூ !! எவரஸ்டை செதுக்கி உன் சிலை செய்யவா !!
வானவில் கொண்டு உன் ஒவியம் வரையவா !!
வானத்தின் நீலம் கொண்டு உனக்கு கடிதம் தீட்டவா !!
நட்சத்திர கூட்டங்களை நூலில் கோர்த்து உனக்கு மாலையாய் அணிவிக்கவா !!
நினைத்தாலே இனிக்கும் செந்தேனே !! உனை மறுநாள் காண எண்ணி எண்ணி ஒவ்வொரு இரவும் வெந்தேனே !! உன்னுள் நான் சேர்ந்துவிட்டேன் !! என்னுள் நீ சேர்வாயா !!
சம்மதம் கூறு !! இருவரும் வெண்ணிலவை நோக்கி படகில் செல்வாம் !! நட்சந்திரங்களோடு நட்சத்திரமாய் !!
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றமின்றி உன்னோடு வாழ ஆசைதான் ஆருயிரே !!!!
அன்புடன்
@ The Emotional Ink !!