
பெண்ணே !!
நீ எம்மொழி பேசுகிறாயோ எனக்கு கவலை இல்லை உன்னால் என் இதயத்தின் மொழியை அறிய முடிந்தால் அது போதும் !!
நீ வெந்நிறமோ கருநிறமோ மாநிரமோ எனக்கு கவலை இல்லை உன் மனம் நந்நிறமாக இருந்தால் அது போதும் !!
நீ குட்டையா நெட்டையா என்று எனக்கு கவலை இல்லை நீ எனக்கு உடன் கட்டையாய் மட்டும் இருந்தால் அது போதும் !!
நீ பாடுவாயா ஆடுவாயா என்று எனக்கு கவலை இல்லை நீ நான் மனசோர்வுடன் இருந்தால் ஆறுதலாய் இரு வார்த்தை பேசினால் அது போதும் !!
நீ ராஜாவின் மகளோ இல்லை ஒரு சாதாரண குடிமகனின் மகளோ எனக்கு கவலை இல்லை நீ என்னை ராஜா போல் பார்த்துக்கொள்வாயானால் அது போதும் !! நான் உனை நிச்சயம் ராணியாய் பார்த்துக் கொள்வேன் !!
நீ லட்சங்களை கொண்டு வருவாயா என்று எனக்கு கவலை இல்லை நம் குடும்பத்தை கச்சிதமாக பார்த்துக் கொண்டால் அது போதும் !!
நீ யாரோ !!
எங்கு இருக்கிறாயோ !!
என்ன செய்து கொண்டு இருக்கிறாயோ !!
என்று எனக்கு தெரியாது !!
உனை தேடி வருவேன் !!
உனை கை பிடிப்பேன் !!
உனை மணம் முடிப்பேன் !!
எனக்காக காத்திரு !!
அன்பே !!
நீ
இக்கணம் !
இந்நொடி !!
இந்நிமிடம் !!!
என்ன செய்து கொண்டிருக்கிறாய் !!
நான் செய்வதைத்தான் நீயும் செய்து கொண்டிருக்கிறாயா !!
அந்நிலவிடம் என் இருப்பிடம் கேட்டு சண்டையிடுகிறாயோ !!
நீயும் என்னைப்போல கட்டிலில் படுத்துக் கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயோ !!
நான்
எப்படி இருப்பேன் !!
எப்படி சிரிப்பேன் !!
எப்படி பேசுவேன் !!
எப்படி நடப்பேன் !!
எப்படி உன் கண்களை பார்ப்பேன் !!
எப்படி உனை ரசிப்பேன் !!
என்ன பாடல்கள் கேட்பேன் !!
என்ன உணவு உன்பேன் !!
எப்படி உனை பார்த்துக் கொள்வேன் என்றெல்லாம் !!
நானும் அதையே தான் செய்து கொண்டு இருக்கிறேன் அன்பே !!
விரைவில் என்னிடம் வந்து சேறு !! இருவரும் சேர்ந்து இவ்வுலகிற்கு “சிறந்த ஜோடி” என்றால் யாதென காட்டுவோம் !! சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்வோம் !!
Nice blog!
I hope all good for u… you will b out of this emotion soon… but that person will alwz remain…
“Hope” – Yes that is all we have stranger. And yes writing is the only way to bleed our feelings…
I can really understand this… This is what i m going through. Sometimes writing only helps to yell out all…
I agree and I know somebody who is a loner… who hardly gets lonely… weird 😦 and yes I rather…