
மனித உயிரின் வாழ்க்கை நீரின் வாழ்விற்கு ஒப்பானது !!
நீர் மேகத்தில் உருவாகிறது நீராவியாய் !! மனிதன் தன் தாயினது வயிற்றில் உருவாகிறான் கருவாய் !!
நீர் தான் நிரப்பப்படும் பாத்திரத்தின் வடிவத்தை பெற்றுக் கொள்ளும் !! அதே போல் மனிதன் தான் வளர்க்கப்படும் சுற்றத்தின் மூலம் நடத்தை பெற்றுக் கொள்கிறான் !!
நீர் பிரிக்கப்படுகிறது தான் மழையாய் விழும் இடம் பொருத்து !!
குளமாக !!! நதியாக !!! கால்வாயாக !!! சாக்கடையாக !!!
அதே போல் மனிதனும் பிரிக்க படுகிறான் தான் பிறக்கும் இடம் பொருத்து !!
மொழியாக !!! மதமாக !!! குலமாக !!! சாதியாக !!!
எதுவாக பிரித்தாலும் நீர் நீர் தான் !! அதே போல் எதுவாக பிரித்தாலும் மனிதன் மனிதன் தான் என்பதை என்று உணர்கிறோமோ அன்று தான் உலகம் அமைதிக்கான பாதையை நோக்கிச் செல்லும்!!
நீரை குடிநீர் கழிவுநீர் என இருவாரியாய் பிரிக்கிறோம் !! அதே போல் மனிதனை பணக்காரன், ஏழை என இருவாரியாய் பிரிக்கிறோம் !!ஆனால் கழிவு நீரையும் சுத்தகரித்து ஒரு நாள் குடி நீராய் மாற்றலாம் என்பதரியாது வாழ்கிறோம்!!
நீர் எவ்விடத்தில் மழையாக விழுந்தாலும் எவ்வாரியாய் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இறுதியில் கடலினைத் தான் சென்றடைய வேண்டும் !! அதே போல் மனிதன் எங்கு பிறந்தாலும் எவ்வளவு பணக்காரனாய் இருந்தாலும் இறுதியில் மண்ணைத் தான் சேர வேண்டும் !!
கடலை அடைந்த நீர் மீண்டும் நீராவியாகி வெவ்வேறு இடங்களில் மீண்டும் மழையாய் பொழியும் !! அப்போது அதே நீர்த்துளி அதே இடத்தில் விழும் என்பது கிடையாது அது போல் ஒவ்வொருவரும் தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும் !!
நீர் நெருப்பில் பட்டால் மீண்டும் நீராவியாய் முதல் நிலைக்கே சென்று விடுவது போல் !! மனித உயிர் தீய சொற்களால் புன் பட்டால் தவறான முடிவுகளால் தன் முதல் நிலையை அடைந்து விடுகிறது !!
ஒவ்வொரு மழைத்துளியும் மண்ணைச் சேரும் முன்னே லட்சியமின்றி காற்றில் அலைந்து ஆடும்!! ஆனால் மண்ணை சேர்ந்தவுடன் அம்மழைத்துளியின் சேவை எல்லையில்லா அளவை எட்டி விடும் !! அது போல் மனித உயிரும் தனியாய் இருக்கும் காலத்தில் வீணாய் சுற்றித் திரியும் !! ஆனால் இன்னொரு உயிருடன் சேரும் போது அவ்வுயிரின் சேவை எல்லையில்லா அளவை கடந்து விடும் !!
நீர் இருக்கும் போது அதன் அருமை நமக்கு தெரியாது !! வரட்சியின் போது தான் அதன் அருமை தெரிய வரும் !! அதே போல் ஒரு உயிர் இருக்கும் போது அதன் அருமை தெரியாது !! அவ்வுயிர் பிரிந்த பின் தான் அதன் அருமை புரியும் !!
உயிரோடு இருக்கும் இக்காலத்தில் எந்த ஒரு பிரிவும் பாராமல் மன நிறைவோடு மனித நேயம் புரிய வேண்டும் !!
நீர் மழையாய் மலையில் உயிர் பெற்று நீரோடையாய் ஓடி நீர் வீழ்ச்சியில் விழுந்து நதியாய் அழகு பெற்று பெருங்கடலாய் மாறுகிறது !! அதுபோல் ஒவ்வொரு மனித உயிரும் வாழ்வின் மேடு பள்ளங்களை சந்தித்து துவண்டு விடாமல் உறுதி பெற்று பெருந்தலைவனாய் பெருங்கடலை போல் மாற வேண்டும் !!
நிறமற்று வாசமற்று இருக்கும் நீர் இவ்வளவு இன்றியமையா தன்மைகளை உடையதாய் இருப்பது போல திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் எந்த மனித உயிர்க்கும் முகம் தேவையில்லை !! எல்லா மனித உயிருக்குள்ளும் ஒரு இன்றியமையா திறமை இருக்கும் !!
அதை கண்டறிந்து விட்டால் உன் முகமும் ஆறுமுகனைப் போல் ஏறுமுகம் தான் !!