Penne IV !!!! – அம்மா – A Tamil Poem

அம்மா !!

அம்மா வெறும் சொல் அல்ல அகிலம் ஆளும் மந்திரம் !!
அம்மா என்ற அழகான சொல்லுக்கு
நிகரான சொல் வேறு யாதெனும் உண்டோ !!
என் செந்தமிழில் !!
செந்தமிழை கற்றுத்தந்த அவளுக்கு !!
செந்தமிழில் கவிதை எழுத பெருமையடைகிறேன் !!

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா !!

அபிஷேகம் செய்யப்படா தெய்வம் என் அம்மா !!
அறிதான அற்புதம் என் அம்மா !!
விலையில்லா சொத்து என் அம்மா !!
பட்டம் பெறா மேதை என் அம்மா !!
அளவுகோளில்லா அன்பு என் அம்மா !!
பாசம் வழிந்தோடும் ஊற்று என் அம்மா !!
தன் நிகரற்ற தாரகை என் அம்மா !!
சுயநலமற்ற இதயம் என் அம்மா !!
அரவணைக்கும் கரம் என் அம்மா !!

என் இல்லத்தினுள் வாழும் பேரில்லம் என் அம்மா !!
என் உள்ளத்தினுள் வாழும் நல்லுள்ளம் என் அம்மா !!

லட்சியம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்கக் கூடாதென கற்றுத் தந்தவள் என் அம்மா !!
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி என்றும் மகிழ்ச்சியாக வாழ கற்றுத் தந்தவள் என் அம்மா !!
கல் தடுக்கி கீழே விழுந்த என்னைத் திட்டாமல்
அக் கல்லை திட்டித் தீர்த்தவள் என் அம்மா !!
எத்தனை முறை சண்டையிட்டாலும்
தேடி வந்து பேசும் தியாக உருவம் என் அம்மா !!
ஒரு நாளில் என்னை ஆயிரம் பேர் நினைத்தாலும்
ஒரே நாளில் ஆயிரம் முறை நினைப்பவள்
என் அம்மா !!
நான் நேசிக்கும் உயிர்களில் என்னையும் நேசிக்கும் ஓர் உயிர் என் அம்மா !!

நான் பெற்ற முதல் பஞ்சு மெத்தை தாய்மடி !!
நான் பெற்ற முதல் இரத்த தானம் தாய்ப்பால் !!
நான் கேட்ட முதல் பாட்டு தாயின் தாலாட்டு !!
நான் கண்ட முதல் ஓவியம் தாயினது முகம் !!
நான் பயணம் செய்த முதல் வாகனம் தாயினது இடை !!

தன் கருவாய் என்னை வளர்த்து !!
தன் உடலில் என்னை சுமந்து !!
தன் உயிரை எனக்கு பகிர்ந்து !!
தன் லட்சியங்களை தூக்கி எறிந்து !!
தன் சூள்நிலைகளை மறந்து !!
தனக்கான யாவையும் துறந்து !!
தன்னை எனக்காக அற்பனித்த தெய்வம் அம்மா !!

என் இதயமாக நீ வாழ்கிறாய் !!
என்றென்றும் எனக்காக துடிக்கிறாய் !!
என் கால்களாய் நீ வாழ்கிறாய் !!
என்றென்றும் என்னைத் தாங்கிக் கொள்கிறாய் !!

நான் வளர வளர நான் உணரும் ஓர் உண்மை !!
என்றும் என் உயிர் தோழியாய் இருப்பது என் தாய் தானென்று !!

தன் காலம் முழுவதும் !!
என்னை !!
வயிற்றிலும் !!
மடியிலும் !!
தோளிலும் !!
சுமந்து வந்தவள் !!

உலகம் இவ்வளவழகானதா !!
உணர்ந்தேன் !!
அவள் என்னை தன் கைகளில் சுமந்த போது !!

காலையில் விழிக்கும் போதும் !!
இரவில் தூங்கச் செல்லும் போதும் !!
காண எண்ணும் ஓர் முகம் நீ தானம்மா !!

நான் படித்த ஓர் துயரமான உண்மை !!
நான்கு வயதில் சண்டையிடுகிறோம் !!
அம்மா என்னுடையது !!
அப்பா என்னுடையது என்று !!
நாற்பது வயதில் சண்டையிடுகிறோம் !!
அம்மா உன்னுடையது !!
அப்பா உன்னுடையது என்று !!

ஐந்து குழந்தைகளை ஒரு தாய் எந்த ஒரு பாரபட்சமுமின்றி வளர்க்கிறாள் !!
ஆனால் அந்த ஐந்து குழந்தைகளால் ஒரு தாயை பாரபட்சமின்றி காப்பாற்றுவது ஏன் இவ்வளவு கடினமாகிறதோ தெரியவில்லை !!

அன்னையை கடவுளிடம் ஒப்பிடாதே என்றென்பேன் நான் !!
ஏனென்றால் என் கஷ்டங்களை கண்டு என்றும் கல்லாய் இருந்ததில்லை அவள் !!

இழந்தவன் தேடுவதும் !!
இருப்பவன் தொலைப்பதும் !!
தான் !!
தாயினது அன்பு !!

வள்ளுவனே சொல்கிறான் உலகப் பொது மறையில் !!
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் !!
தன் பிள்ளையை நற்பண்பு நிறைந்தவன்(ள்)!!
என்று பிறர் சொல்லக் கேட்டால் !!
தான் உனை ஈன்ற பொழுது இருந்த மகிழ்ச்சியை விட !!
இரட்டிப்பான மகிழ்ச்சியைப் பெறுவாள் உன் தாய் !!
அதை லட்சியமாய் கொண்டு உன் வாழ்வில் உழைத்துக் கொண்டே இரு !!

இறுதியாக ஒன்று சொல்கிறேன் !!
அம்மாவுக்கென்று தனிக் கவிதை தேவையில்லை !!
அம்மாவே ஒரு சிறந்த கவிதை தான் !!
பழகிப் பார் !! அன்பை பகிர்ந்துப் பார் !! பாரை ஆழலாம் !!

Published by @ The Emotional Ink !!

Aspiring Writer with an Emotional Heart who is basically asusual an Engineer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create your website with WordPress.com
Get started
%d bloggers like this: