There are things which we thought are the things that will make others happy. But the real thing is that those things are the things that can hurt them a lot – # LOVE

பெண்ணே !!
ஒரு தலைக் காதலில் நான் ஒரு தலை இழந்து நின்றேன் !!
ஆறுதலற்று அனாதையாய் வாழ்ந்தேன் !!
வெளியில் சொல்லவும் முடியாமல் !!
உள்ளே அதை மெல்லவும் முடியாமல் !!
வலியுடன் நின்றேன் !!
ஆறுதலற்றிருந்த எனக்கு ஆறுதலாய் நீ வந்தாய் !!
அது காதலே இல்லையென நிருபித்தாய் !!
என்றும் நான் இருக்கிறேனென்றாய் !!
உன்னைப் போன்ற மனம் வேறெங்கும் இல்லையென்று உணர்ந்தேன் !!
தாயை விட அதிக அன்பு காட்டினாய் !!
என் தாயிடம் நான் சண்டையிட்ட போதும் என்னிடம் கோபித்துக் கொண்டாய் !!
நான் புரியும் சிறு சிறு தவறுகளையும் கண்டித்தாய் !!
நான் எழுதும் கவிதையாகட்டும் நான் வரையும் ஒவியமாகட்டும் நான் இசைக்கும் பாடலாகட்டும்
உன் வாழ்வில் நீ கண்டதிலே சிறந்ததென்பாய் !!
நான் அடையும் சிறு சிறு வாழ்க்கை முன்னேற்றங்களையும் பாராட்டுகளையும் நீ பெற்றது போல் சந்தோஷம் அடைந்தாய் !!
இரவு பகல் பாராமல் என்னோடு உரையாடி என் நலனையே முக்கியமாய் கருதினாய் !!
வேறொரு பெண்ணிடம் பேசினாலே சினம் கொண்டாய் !!
உயிருக்கு உயிராக உணர்வுக்கு உணர்வாக என்னுடன் இவ்வாழ்க்கையில் பயணித்தாய் !!
மகிழ்ச்சியில் திளைத்தேன் !!
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தேன் !!
எல்லையில்லா மனநிறைவில் இருந்தேன் !!
என் உயிர்துணையை கண்டு விட்டதாக எண்ணினேன் !!
ஆனால் இதுவெல்லாம் தவரன்றோ என உணர்த்தினாய் !!
உன் இதய சோலை வாசல் திறந்திருந்ததை கண்டுதான் நான் நுழைய வந்தேன் !!
ஆனால் எல்லாம் கானல் நீர் என திரித்துவிட்டாய் !!
நான் தவராக உணரவில்லை எதையும் !!
ஆனால் நீ ஏன் மறைக்கிறாய் அதையும் !!
நான் சூரியனாக நீ சந்திரனாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வோம் எனக் கூறி இன்று நட்சத்திரங்களோடு நட்சத்திரமாய் இருளில் தொலைந்துவிட்டாய் !!
எனை பிடிக்காதென்றுறிந்தாலும் மறந்து சென்றுறிருப்பேன் !!
எனை பிடிக்கும் என்று விட்டு எனை விட்டுச்சென்றதேனோ !!
நாம் ஒன்றாய் பேசி சிரித்துக் கொண்டு நடந்து சென்ற பாதை இன்று தனியே ஏன் வந்தாய் என என்னை கேட்பதேனோ !!
ஆயுள் முழுதும் உன் மூச்சுக்காற்று படும் தூரத்தில் உன்னோடு வாழ நினைத்தேன் !!
அரை நொடி மின்னல் போலே எனை விட்டுச் சென்றதேனோ !!
ஆனால் ஒன்று !!
மறக்கப்படும் அன்பும் !!
மறுக்கப்படும் அன்பும் !!
மறைக்கப்படும் அன்பும் !!
மரணத்தைவிட கொடுமையானது !!
அன்பே !!
அன்றும் !!
இன்றும் !!
என்றும் !!
என் நினைவில் என் சந்தோஷமாய்
நீ !!
இருந்தாய் !!
இருக்கிறாய் !!
இருப்பாய் !!
உயிரே !!
ஏன் என் வாழ்வில் வந்தாய் !!
ஏன் இப்படி என் இதயத்தில் நின்றாய் !!
ஏன் இவ்வளவு அன்பை வழங்கினாய் !!
ஏன் வீண் ஆசை காட்டினாய் !!
ஏன் இவ்வலியைக் தந்தாய் !!
தன் போக்கில் கிடந்த என் இதயத்தை
போறபோக்கில் சிதைத்து விட்டாய் !!
பூஞ்சோலையாய் இருந்த நான் இன்று பாலைவனம் ஆனதேனோ !!
ஏமாளியாக மட்டுமல்ல ஒரு கோமாளியாய் ஆனதேனோ !!
ஆதரவற்ற அனாதை ஒருவன் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை தூரத்தில் கண்டால் எப்படி இருக்குமோ !!
கிரிக்கெட் போட்டியில் நம் அணி ஜெயிக்கும் தருவாயில் இருக்கும் பொழுது மழை பெய்தால் எப்படி இருக்குமோ !!
ஒரு முக்கிய வேலைக்காக வெளியில் செல்லும் வேளையில் நம் காலணி அந்து விட்டால் எப்படி இருக்குமோ !!
தூக்கத்தில் நல்ல கனவு கண்டு கொண்டிருக்கும் போது கடிகார அலாரம் அடித்தால் எப்படி இருக்குமோ !!
இளவயதில் தன் பிள்ளையை இழந்த தாய்க்கு எப்படி இருக்குமோ !!
இரும்பு மனிதன் இறந்த போது மார்வெல் ரசிகர்களுக்கு எப்படி இருந்ததோ !!
தோனி ரன் அவுட் ஆன போது இந்தியர்களுக்கு எப்படி இருந்ததோ !!
அப்படித்தான் இருக்கிறது என் மனநிலை !!
ஏனோ இந்த வலிகளும் போகல !!
தானோ உன் நினைவுகள் தாழல !!
நானோ என்று திருந்துவேன் தெரியல !!
தேடும் முன்பே வந்த பொருள் வாழ்வில் நிலைக்காதென்பார்கள் !!
ஆனால் தேடித் தேடிக் கண்ட நீயும் சென்று விடுவாய் என்று கனவில் கூட எண்ணியதில்லை !!
நேற்று வரை எதையோ தேடினேன் !!
இன்று என்னையே தேடுகிறேன் !!
உனக்காக !!
ரோமியோ ஜுலியட் போல !!
ஷாஜஹான் மும்தாஸைப் போல !!
ரவீந்தர்சிங் குஷியைப் போல !!
உண்மைக் காதல் என்றும் சாகாதென்பார்கள்
என் காதலும் பொய்யானதல்ல !!
கிடைக்காத உனக்காகக என் காதலை ஒரு போதும் வெறுக்க மாட்டேன் !!
கிடைக்காத என் காதலுக்காக உன்னையும் ஒரு போதும் வெறுக்க மாட்டேன் !!
என்றும் இருப்பாய் என் மனதில் !!
நீ !!
எல்லையில்லா அன்போடு !!
“நட்சத்திரங்களோடு நட்சத்திரமாய் இருளில் தொலைந்து விட்டாய் ” 👌🏼👌🏼👌🏼👌🏼
LikeLiked by 1 person