Design a site like this with WordPress.com
Get started

Penne VI !!!!!! – Petromax  – A Tamil Poem

ஓர் தினம் !!
ஓர் இரவு !!
ஓர் நிலவு !!
ஓர் ரயிலில் பயணம் செய்தது !!

அதே ஓர் ரயிலின் !!
எதோ ஓர் பெட்டியில் !!
இதோ ஓர் கதவோரம் !!
ஏதோ ஓர் நினைவோடு !!
அஃதே !!
வானில் நட்சத்திரங்களின் துணையுடன் !!
இஃதே !!
நிலவின் ஒளியில் !!
காற்றின் அலையில் !!
கவிதை வரியில் !!
பாடலின் ஒலியில் !!
மயங்கி நின்றேன் !!

ரயில் முன்னே செல்ல !!
காற்று என்னை பின்னே தள்ள !!
ரயிலினுள்ள !!
ஏதோ ஒரு நல்ல !!
பெண் மான் ஒன்று துள்ள !!
கொஞ்சம் மெல்ல !!
அவள் கண்விழி என்னை கொல்ல !!
என் கால் நழுவி செல்ல !!
கதவை நான் பற்றிக் கொள்ள !!
மன்மதன் விட்டான் வில்ல !!
என் இதயம் என் கிட்ட இல்ல !!

எல்லாம் வல்ல !!
இறைவனுமல்ல !!
இந்த புள்ள !!
அவள நான் வெல்ல !!
அவ சொன்ன சொல்ல !!
சேத்து வச்சேன் உள்ள !!
இன்று கவிதையாய் கொட்டுது அது மெல்ல !!

மீன் வடிவ கண் !!
முக்கால் அங்குல மூக்கு !!
குழி விழும் கண்ணம் !!
குளிரூட்டும் கண்ணாடி !!
ரோஜா இதழ் உதடு‌ !!
கரு நிற கூந்தல் !!
வெள்ளை நிற சட்டை !!
நீல நிற ஜீன்ஸ் !!
நளினமான நடை !!
பூஜ்ய அளவு இடை !!
பொற்சிலை வடிவம் !!
பால் நிற தேகம் !!
பேச்சில் ஒரு வேகம் !!
என் காதில் எழும் ராகம் !!
ஏனோ வரும் ஒரு மோகம் !!
இதுவும் கடந்து போகும் !!
என அவளை விவரித்து கவிதை எழுதிக்கொண்டு இருந்தேன் !!
என் மனதில் !!

எதிர் திசையில் சீரிய ரயிலின் சத்தம் !!
என் கனவை மொத்தம் !!
கலைத்தது !!

உள்ளே சென்றேன் !!
இருக்கையில் அமர்ந்தேன் !!

ஜன்னலோரம் !!
ஜில்லென்று காற்று வீச !!
மின்னல் ஒன்று என்னை நோக்கி வந்தது !!
ஜன்னல் என்றது !!
என்ன என்றேன் !!
மீண்டும் ஜன்னல் என்றது !!
மீண்டும் என்ன என்றேன் !!
ஜன்னல் இருக்கை என்னுடையது என்றது !!
ஓ சரி என்றேன் !!

ஜன்னல் ஓரம் மின்னல் அமர !!
இடி முழக்கமிட !!
வானில் மழை பொழிய !!
நிலவற்ற இருளில் !!
என் இதயம் வெளிச்சம் பெற்றது !!
இப்பெண் நிலவின் முன்னிலையில் !!

கரணம் தப்பினால் மரணம் !!
எனவே எப்போதும் கவனம் !!
விழுந்திருந்தால் என்ன செய்திருப்பாயடா !!
என்றது அந்நிலவு !!

நான் விழுந்துதான் விட்டேன் கண்ணே !!
கீழே அல்ல உன்னுள் !!
என்றது புது வெளிச்சம் கண்ட என் இதயம் !!

அந்த 5 மணி நேர ரயில் பயணம் !!
என் வாழ்க்கையில் மறக்க முடியா ஒரு தருணம் !!

இன்பத்தின் உச்சியில் !!
மகிழ்ச்சியின் ஊற்றில் !!
ஆனந்தத்தின் அருவியில் !!
குதூகல ஆற்றில் !!
உல்லாச ஓடையில் !!
சந்தோஷ கடலில் !!
குளித்தது போல் ஒரு உணர்வு !!
மனம் உற்சாக எழுச்சி பெற்றது !!

கதைத்தோம் !!
பேசினோம் !!
பறைத்தோம் !!
உரையாடினோம் !!
சிரித்தோம் !!
இனித்தோம் !!
நான் என் பண்பான பைந்தமிழில் !!
அவள் தன் மயக்கும் மலையாளத்தில் !!

என் கவிதைகளை இசைத்தேன் !!
என் கட்டுரைகளை காட்டினேன் !!
என் கையால் தீட்டிய ஓவியங்களை காண்பித்தேன் !!
என் உள்ள உணர்வுகளை பகிர்ந்தேன் !!
அத்தேவதையிடம் !!

இக்கணம் !!
இந்நொடி !!
இந்நிமிடம் !!
இக்கண நேரம் !!
கடந்து விடாமல் இப்படியே நின்றுவிட கூடாதா !!
என்ற ஓர் உணர்வு !!

அக்கேரளத்துப் பைங்கிளி
இம்மறத்தமிழனின் கையை பிடித்துக்கொள்ள மாட்டாளா !!
எம்மூச்சுக் காற்று தூரத்திலே வாழ மாட்டாளா !!
அவள் குரலின் இனிமையை என் காதுகளுக்கு ஊட்ட மாட்டாளா !!
அவள் கண் அசைவில் என்னை கிரங்கிப் போக வைக்க மாட்டாளா !!
எல்லையற்ற அன்பை என் மனதில் ஊற்ற மாட்டாளா !!
காலம் முழுதும் !!

கனா கண்டேன் !!
பல வினாக்களுடன் !!

நேரம் கடந்தது !!
ரயில் நின்றது !!
ரயில் நிலையம் வந்ததது !!
பிரியா விடை தந்தாய் !!

நாலு அடி கடந்த பின் எனை திரும்பிப் பார்த்தேனோ !!
காதல் விதையை விதைத்ததேனோ !!
பின் என்னை விட்டு போனதேனோ !!
தூரமாக சென்றதேனோ !!
உன் பெயர் கேட்டரிந்த நான் !!
உன் வாழ்வை கேட்டரிந்த நான் !!
உன் தொடர்பை கேட்க மறந்ததேனோ !!

சொல்லாமல் போன பெண்ணே !!
நீ எந்தன் வாழ்க்கை தானே !!
நீ இல்லை என்றால் !!
இங்கு நானும் இல்லையே !!

அன்று முதல் !!
அதே ரயிலின் !!
அதே கதவோரம் !!
உன் நினைவோடு !!
நீ ஓர் நாள் நிச்சயம் வருவாயென எண்ணி !!
உன் கரம் பிடிக்க !!
ஓர் வரம் கிடைக்க !!
தினம் தினம் காத்திருக்கிறேன் !!
உனக்காகக !!

என் பெட்ரோமேக்ஸ் !!

அன்று முதல் !!
இன்று வரை !!
எனை அறிந்தவர்கள் !!
என்னிடம் கேட்கும் !!
ஒரே கேள்வி !!

“பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா !!!!!!!”

Advertisement

Published by @ The Emotional Ink !!

Aspiring Writer with an Emotional Heart who is basically asusual an Engineer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: