
அழகு என்னும் சொல்லுக்கு அர்த்தமானவள் நீ
அவ்வழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகு நீ
பார்க்க பார்க்க ரசிக்க தோனும் குட்டி தேவதை நீ
பேச பேச கதைக்க தோனும் சுட்டி குழந்தை நீ
பழக பழக உருக வைத்த என் தாயின் மறு உருவம் நீ
நிஜமாய் மாறிய என் கனவு நீ
மீண்டும் கனவாகவே மாறிய என் நிஜமும் நீ
என்னுடைய சந்தோஷமும் நீ
என்னுடைய சோகமும் நீ
என்னுடைய மொத்தமும் நீ
உன்னோடு உனக்காக நான் வாழ நினைத்தேன்
ஆனால் இன்றோ நான் எனக்காக உன் நினைவுகளோடு வாழ்கிறேன்
என்னிடம் உன்னை மறக்க சொன்னாய்
அதெப்படி சாத்தியம்
கடற்கரை அலையை தொட மறப்பது சாத்தியமானால்
நுரையீரல் மூச்சு விட மறப்பது சாத்தியமானால்
பூமி சூரியனை காண்பதை மறப்பது சாத்தியமானால்
நானும் உன்னை மறக்கிறேன்
உன் வாய் பேசிய வார்த்தைகள் புரிந்ததா தெரியவில்லை எனக்கு
ஆனால் உன் கண்கள் பேசிய வார்த்தைகள் பாய்ந்தது என் இதயத்தில்
பேசிக் கொண்டு இருந்தால் தான் காதல் என்பதல்ல
நினைத்துக் கொண்டு இருந்தாலும் காதல் தான்
உன்னை நினைத்து கொண்டே வாழ்வேன்
நட்சந்திரங்களனைத்தும் வானிலிருந்து கீழே விழும் வரை
சமுத்திரங்களனைத்தும் நீரின்றி வற்றிப்போகும் வரை
அதாவது என் வாழ்வின் இறுதி வரை
நான் இறந்து என் நினைவை இழந்தாலும்
உன் நினைவை இழக்க மாட்டேன்
ஒரு பொழுதும்
தனக்காக அழுத அவளையும்
தன்னை அழ வைத்த அவளையும்
ஆண் ஒரு போதும் மறக்க மாட்டான்
நானும் அப்பிறவியில் ஒன்றாகிவிட்டேனடி
உயிரே என் உயிர் ஏங்குதடி
எங்கே உன் உயிர் என தேடுதடி
மழையில் நனைகின்றேன்
வெயிலில் காய்கின்றேன்
ஆற்றில் குதிக்கின்றேன்
மலையில் ஏறுகின்றேன்
கடலில் மிதக்கின்றேன்
ஆனால் என் சிரிப்பை காணலடி
என் அழுகையும் என்னை விட்டு போகலடி
உன்னுடன் பேசாமல் வாழும் ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகங்களாய் ஆனதடி
யுகங்களை கடந்து வாழும்
பேரனுபவம் கொண்டேன் எல்லாம் உன்னாலடி
கடல் அலைகள் கொந்தளித்து கரைகளை வெள்ளமாக்குவதைப் போல்
உன் நினைவலைகள் என் கண்களை வெள்ளமாக்குதடி
கண் மூடினால் உன் பிம்பம் தெரியுதடி
கண் திறந்தால் உன் குரல் கேக்குதடி
என்னை கெத்து எனக் கூறிய உள்ளங்கள்
இன்றோ என்னை பித்து எனக் கூறுதடி
என்னை சடையன் எனக் கூறிய உள்ளங்கள்
இன்றோ என்னை மடையன் எனக் கூறுதடி
அன்றொரு நாள் என் கண் முன்னே வந்தாய்
உன் செவ்விதழ் கொண்டு புன்னகை தந்தாய்
என் விரல்கள் உன் முகத்தை வருடும் முன்பு
கனவாகி காற்றில் கலைந்தாய் அது ஏனோ
பட்டுப்பூச்சி பட்டாம்பூச்சியான என் இதயத்தில்
இன்று பட்டாம்பூச்சிகள் பட்டுப்பூச்சியாகும் மாயம் ஏனோ
மாநகரம் போல் இருந்த என் மனசு தனித்தீவாய் மாறியதேனோ
அத்தனித்தீவும் இன்று நாதியற்று அனாதயான மாயம் ஏனோ
நிலநடுக்கம் கொண்டு எழும் நிஜக்கடலினை விட
மனநடுக்கம் கொண்டு எழும் என் அகக்கடல் ஏற்படுத்தும் சேதம் அதிகமான மாயம் ஏனோ
எனக்கு உன் மீது துளியளவும் கோபம் இல்லை
என் கண்ணம்மா
உன் கண்களில் ஒரு துளி கண்ணீரும் வந்துவிடக்கூடாது என்ற பயம் தான் உண்டு
உன்னை இழந்ததால் வாடுகிறேனோ இல்லையோ
நான் என்னை இழந்து நிச்சயம் வாடுகிறேன்
என்னால் என்னை மீட்டெடுக்க முடியவில்லை
உன்னைக் காணும் முன் இருந்த என்னை நான் மறந்துவிட்டேன்
பிறர் கூறக் கேட்டும் அது நான் இல்லை என மறுத்துவிட்டேன்
ஆனால் ஒன்று
நீ தங்கிய என் இதய சிறைக்கு
வேறு கைதி இனி யாரும் இல்லை
Miss You so much My True Love !!