
சூரியன் மறையும் அந்தி மாலையில் !!
கருமேகங்கள் கூடிய அவ்வேளையில் !!
சூரிய ஒளியை மேகங்கள் தடுக்க !!
தடுப்பைத் தாண்டிய சூரிய ஒளி மழைத்துளியை பிடிக்க !!
லட்சமழைத்துளிகள் வெள்ளி அம்பு போல் !!
சாலையின் தரையைத் தாக்கியது !!
எண்ணற்ற படிகப்பூக்களாய் சாலையை நிரப்பியது !!
கையில் குடையோடு நான் நடக்க !!
மழையின் வாசம் என் மூச்சை கடக்க !!
தென்றல் காற்று மரங்களின் இலைகளை அசைக்க !!
மழைத்துளிகள் என் குடை மேல் விழுந்து மேளமிட்டது !!
சாலையில் செல்லும் வாகனங்களின் ஒலி தாளமிட்டது !!
சாலையோர மின்விளக்குகளின் ஒளி அவ்வாகனங்கள் மீது கோலமிட்டது !!
என் கண்களோ என் மனதிற்கு ஒரு திசையை நோக்கி பாலமிட்டது !!
கண்டேன் அக்காரிகையை !!
இறக்கை இல்லா தேவதையை !!
சாலையோரக் குட்டையில்
மழைத்துளியை கால்பந்தாடினால் !!
மழழையைப் போல மழழைகளோடு
மழையின் தாளத்திற்கு இசைந்தாடினாள் !!
யார் இவள் ?
கதிரவனின் கடைசி மகளோ இவள் !!
வெந்நிலவின் இளைய தங்கையோ இவள் !!
நட்சத்திர கூட்டங்களின் தலைவியோ இவள் !!
தேவலோகத்தின் தேவதையோ இவள் !!
பூலோகத்தின் இளவரசியோ இவள் !!
இறைவனே செதுக்கிய செம்பொன் சிற்பமோ இவள் !!
வானவில்லே வரைந்த ஒவியமோ இவள் !!
புதிதாய் பூத்த பூவோ இவள் !!
பூவுள்ளம் கொண்ட பூந்தேரோ இவள் !!
பூவினது தேன் போன்று இனிமையானவளோ இவள் !!
பூவினை தொட்டுச் செல்லும் தென்றலோ இவள் !!
பூக்களால் ஆன பூச்செண்டோ இவள் !!
ரோஜா மலரோ இவள் !!
மூங்கில் துளிரோ இவள் !!
மார்கழிக் குளிரோ இவள் !!
மலையில் ஏற்றும் மகரஜோதியோ இவள் !!
வளமான பச்சை வயல்வெளியோ இவள் !!
என் வாழ்வின் முதல் மழைத்துளியோ இவள் !!
பால் வண்ணம் கொண்ட அன்னமோ இவள் !!
மஞ்சள் பூசிய மலைக்குயிலோ இவள் !!
பிறைப் பொட்டு வைத்த வண்ண மயிலோ இவள் !!
பஞ்சு மெத்தை மேனி கொண்ட பஞ்சவர்ணக் கிளியோ இவள் !!
சில்மிஷம் செய்யும் சின்ன சிட்டுக்குருவியோ இவள் !!
நெற்றி முடியை இவள் ஒதுக்கும் பொழுது !!
நாணம் கொண்டு இவள் சிரிக்கும் பொழுது !!
அங்குலம் அங்குலமாக இவள் அழகில் !!
என் உயிரை உருக்குகிறாள் !!
யோசிக்கிறேன் !!
உலகம் அழகாய் தெரிவது உன்னால் தானோ !!
கடல் அலை கரையை நோக்கி வருவது உனை வருடதானோ !!
சூரியன் உதிப்பது உன்னைக் காணத்தானோ !!
நிலவு இரவில் ஒளிர்வது உன் அழகைக் கூட்டதானோ !!
கண்களைக் கொண்டு கதைக்கிறாய் !!
உள்ளத்தைக் கொண்டு ரசிக்கிறாய் !!
கால்களைக் கொண்டு காற்றில் பறக்கிறாய் !! பேரழகே !!
தத்தித் தாவ தோனுது மனசு !!
நித்தம் நித்தம் ஆனது புதுசு !!
இது என்ன தினுசு !! தாரகையே !!