Penne X !!!!!!!!!! – தங்கை

தங்கை:

தங்கம் போன்ற மங்கை
என்பது தான் தங்கை என்றானதோ !!

பாசத்தில் ஒரு தாய் !!
நேசத்தில் ஒரு தந்தை !!
தாங்குவதில் ஒரு தம்பி !!
ஏங்குவதில் ஒரு பிள்ளை !!
அறிவுரையில் ஒரு அண்ணன் !!
ஆதரவில் ஒரு அக்கா !!
இப்படி
ஒர் உயிரில் 
ஓர் குடும்பமாய் இருக்கிறாய் !!

குட்டிக் குட்டி குரும்புகள் செய்யும்
எங்கள் குட்டி தேவதையே !!
சுட்டிச் சுட்டி கதைகள் கதைக்கும்
எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தையே !!

உனக்கு திருமணமாகி !!
நீ என்னை விட்டுப் பிரிந்து !!
உன் புகுந்த வீட்டுக்கு செல்லும் நேரம் !!
என் கண்களில் இருந்து வடியும் நீறும் !!
நீ எனக்காக விட்டுக் கொடுத்த அனைத்தையும்
நினைவு கூறும் !!

நீ எனக்கோ 
பலமுறையில் பலவகையில்
விட்டுக்கொடுத்து இருக்கிறாய் !!
என் மனம் உடைந்து
நான் அழுத நேரத்தில்
என் தோலில்
தட்டிக்கொடுத்து இருக்கிறாய் !!

தாய்மை என்பது பெண்களின் பிறவிக்குணம்
என்பதை 
உனைக் கண்டு தான் அறிந்து கொண்டேன் !!

தன் நலம் கருதா தாமரையே !!
என் நன்னலம் ஒன்றையே கருதும்
என் நீங்கா உறவே !!

உன் கண்ணில் வரும் 
சிறு துளி கண்ணீரை
என் உள்ளம் தாங்காதம்மா !!
என் கண்கள் நாளும் 
தன்னை மூடி தூங்கதம்மா !!

எங்கள் வீட்டு இளவரசி !!
நீ சமைத்ததை உண்டால் 
மறுநாள் எனக்கு வாய்க்கருசி !!
நீ சமைத்ததில் !!
ரசம் எது !!
சாம்பார் எது !!
என்பதை கண்டுபிடிக்கவே !!
எனக்கு நான்கு நாட்கள் ஆகி விடும் !!
நான் கொண்டிருந்த பசியோ
ஆளை விடு என ஓடிவிடும் !!

நகம் வளர்த்த ராட்சசியே !!
நகம் இருந்தால் நீ பெரிய புலி அல்ல !!
என்றும் சிறிய எலி தான் !!
இச்சிங்கத்தை சீண்டாதே !!
என் கர்ஜனையில் கரைந்து போவாய் !!
உன் நகத்தால் !!
என் முகத்தில் !!
நீ பதித்த ரயில் தடம் !!
என் உலக வரைபடம் ஆனது !!
ஏனென்றால் என் உலகமே நீதானடி !!
என் குட்டி தங்கமே !!
எங்கள் வீட்டு குத்துவிளக்கே !!

நான் நிம்மதியாக இருப்பது உனக்கு பிடிக்காது !!
ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் உன்னை விட பெரிதாய் வேறு எம்மனமும் துடிக்காது !!
ஆக தாயும் தோழியும் ஒரே உருவாய் அமைந்த
பாசத்திற்கான பள்ளிக்கூடமே !!

உன் திருவாயால் நீ என்னை “டேய் அண்ணா” என்றழைத்தால்
உனக்காக நீ எது கேட்டாலும் நான் செய்வேன் !!
என் உயிரை அடகு வைத்தாவது !!
உன் முகத்தில் புன்னகை குறையாமலிருக்க !!

என் தோலில் சுமந்து 
நான் வளர்த்த உன்னிடம் !!
என் தோலில் சுமக்க !!
என்னை மாமனாக்க !!
எனக்கு 
ஒரு மருமகனையும்
ஒரு மருமகளையும்
பெற்றுத் தர வேண்டும் !!
இது இவ்வண்ணனின் ஒரே ஆசை !!

உன் வாழ்க்கைக்கு ஒளி காட்டும் ஓர் கலங்கரை விளக்காய் !!
உன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் ஓர் கிறிஸ்துமஸ் தாத்தாவாய் !!
உன் பிற்கால குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் ஓர் தூணாய் !!


தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள் !!
அது போல !!
உனக்கு வரப் போகும் துன்பங்களை முன்னரே அறிந்து !!
அது உன்னை தொட்டு விடாமல் பாதுகாக்கும் !!
ஓர் தெய்வத்தின் சீடனாய் வாழ்ந்து உயிர் துறப்பேன் !!
என் மற்றோர் அன்னையே !!

என் வாழ்வில் நான் எந்த நிலைக்கு சென்றாலும் !!
உனை என்றும் யாரிடமும் தோற்க விட மாட்டேன் !!
உன் ஆசை தனை நிராசையாக விட மாட்டேன் !!
உன் தந்தையாய் !!
உன் தமயனாய் !!
உன் நண்பனாய் !!
உனை என்றும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் !!

என்னுடன் !!
என்னோடு பிறந்து !!
என்னோடு வளர்ந்து !!
என் மற்றோரு அன்னையாய் !!
அவள் திட்டை வாங்கிட !!
அவள் பாசத்திற்கு ஏங்கிட !!
எனக்கு ஒரு தங்கை !!
எப்போதும் 
என் ஏழேழு ஜென்மத்திலும் வேண்டும் !!
அதுவும் நீயே வேண்டும் !!

Published by @ The Emotional Ink !!

Aspiring Writer with an Emotional Heart who is basically asusual an Engineer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: