
கெட்டவள் சாகும் போது தான் கஷ்ட படுவாள் !!
ஆனால் நல்லவள் சாகும் வரை கஷ்ட படுவாள் !!
நியாபகம் இருக்கட்டும் !!
கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை கதை இல்லா திரைப்படம் ஆகிவிடும் !! கதையில்லா திரைப்படத்தில் சுவாரசியம் ஏது !!
நல்லவள் கெட்டவள் என்பது உலகின் கண்களுக்கே !!
உனக்குள் நீ யார் என்பதை யோசி !!
நீ நல்லவளோ கெட்டவளோ அது வேறு !!
ஆனால் கஷ்டங்கள் என்றும் நிரந்தரமே நீ யாராக இருந்தாலும் !!
வாழ்க்கை !! கஷ்டங்களைக் கொண்டு சுவாரசியமாகும் போது !! இஷ்டப்பட்டு கஷ்டப்படு !!
உனக்கு கிடைத்த இத்தகைய குட்டி வாழ்க்கையில் !!
நஷ்டங்கள் ஏதும் வராது !!
இத்தகைய குட்டி பிரபஞ்சத்தில் !!
நமக்கு கிடைத்த இத்தகைய குட்டி வாழ்க்கையில்!!
குட்டி கஷ்டம் கூட படவில்லை என்றால்!!
பிறகு இவ்வுலகில் நாம் பிறந்ததில் !!
என்ன பெருமை உண்டு!!
சிரித்து கொண்டே இரு !!
உன் சிரிப்பை நீயே ரசித்து கொண்டே இரு !!
உனக்கே புரிந்து விடும் !!
விலை மதிப்பற்ற உன் உயிரின்
தனித்துவமும் மேன்மையும் !!
மற்றும் அதன் மேலோங்கிய மகிமையும் !!
வாழ்க்கையின் சில நிமிடங்களில் !!
சில பல கஷ்டங்களால் இது போன்ற ஓர் தேவையற்ற உணர்வு
தோன்றுவது சகஜம் தான் !!
சற்றே சிந்தி !!
உனை பெற்றெடுத்த ஜீவனையும் !!
உனை தூக்கி வளர்த்த ஜீவனையும் !!
உன் முகத்தில் புன்னகை குறைந்தால் !!
அவர்கள் மனது எப்படி புன்படும் என்று !!
உன் நலனுக்காக !!
உன் முன்னேற்றத்திற்காக !!
உனை பிரிந்து அந்த இரு ஜீவனும் !!
கஷ்டத்தை அனுபவிக்கும் ஒவ்வொரு நொடியையும் யோசி் !!
நீ எங்கிருந்தாலும் !!
அவர்கள் மனதில் ஒவ்வொரு நொடியும் இருப்பாய் !!
வாழ்வில் முன்னேற அவர்களை பிரிந்து வாழும் நீ !!
இச்சமயத்தில் !!
கஷ்டம் வரும் போதெல்லாம் தந்தையின் தோலில் சாய்ந்து கொள்வது போல நினைத்துக் கொள் !!
அழுகை வரும் போதெல்லாம் தாயின் மடியினில் உறங்கிக் கொள்வது போல நினைத்துக் கொள் !!
அச்சம் வரும் போதெல்லாம் நண்பனின் கையை பிடித்துக் கொள்வது போல நினைத்துக் கொள் !!
எத்தகைய தவறான உணர்வும் உன்னுள் எழாது !!
மீழ்வாய் கண்ணே !!
காலமும் கடந்து போகும் !!
எந்த ஒரு துன்பமும் மறைந்து போகும் !!
உறுதியாய் இரு !!
உன் அன்பை நாடி வருபவர்களுக்கு உருதுணையாய் இரு !!
கவனமாய் இரு !!
இவ்வுலகை உன் பக்கம் கவர்ந்து ஈர்க்கும் காந்தமாய் இரு !!
அடக்கமாய் இரு !!
ஆதரவளிக்கும் அன்னை போன்ற உள்ளமாய் இரு !!
இனிமையாய் இரு !!
இயன்ற வரை பிற மனதுக்கு அமைதியூட்டும் இல்லமாய் இரு !!
ஆனால் மிகவும் முக்கியம் எப்பொழுதும் சிரித்து கொண்டே இரு !!
சிரிப்பு தான் அழகு !!
சிரிப்பு தான் உனக்கு பேரழகு !!
பெண்ணே !!