
அந்திமாலை நேரம்
காளி என்னும் ஆற்றங்கரையோரம்
அந்தி மழை எந்தன் விழியிலிருந்து பொழிகிறது
எந்தன் விழி உந்தன் பிம்பம் தேடி அலைகிறது
சாலையோர மாலை
வரும்வழி எங்கும் பாலை
என் மேல் படும் மெல்லிய காற்று கூட
என்னை பலார் என்று அறைவதேனோ
கண்மணியே
நீயில்லா பாதையில்
இயற்கையின் மேலுள்ள போதையில்
இத்தனிக்காட்டில்
நான் தொலைந்த மாயம் ஏனோ
கண்மணியே
நிலவு என் தனிமையைக் கண்டு சிரிக்கின்றது
மேகம் என் நிலை புரிந்து நிலவின் கண்ணை மறைக்கின்றது
நான் காணும் திசையெல்லாம் நட்சத்திரங்களாய் தெரிய
என் துருவ நட்சத்திரமே நீ எங்கே சென்றாய்
என்னுள் எழும் கேள்விகளுக்கு காரணமே
அதன் பதில்களை திருடிக்கொண்டு எங்கே சென்றாய்
மனதில் இன்றும் இருக்குதடி
நாம் சென்ற வீதி உலா
ஆனால் உன் நண்பகலில் இன்றோ
நானும் வானில் நிலா
அந்த வானம் ஒன்று தான்
இந்த பூமி ஒன்று தான்
நீயும் ஒன்று தான்
அட நானும் ஒன்று தான்
ஆனால் நாம் ஒன்றில்லை என்றானதேன்
கண்மணியே
கனவுகள் நிஜமாகி கண் முன்னே தெரிவதும்
நிஜங்கள் கனவாகி காற்றிலே கரைந்து போவதும் தான் காதலா
கண்மணியே
கல்லாய் இருந்த மனம் கல்லரை ஆகிப் போனதடி
நெல்லாய் இருந்த வாழ்க்கை உடைந்து இன்று உமி ஆகிப் போனதடி
என் கண்மணியே
அழகில் சிறந்த வெண்ணிலவு என் கண் முன்னே இருந்தும்
என் மனம் அன்புக்கு பெயர் போன உன்னை தேடி அலைகிறது
கண்மணியே
அவ்வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வந்து என்னிடம்
உன்னை காதலிக்கிறேன் என்றாலும்
மறுப்பேன் கண்மணியே
உன்னைத் தவிர காதல் வேறு எனக்கு இனி இல்லை என்பதால்
கல் கரையும் வரை
சூரியன் அணையும் வரை
உலகம் அழியும் வரை
உன் நினைவு ஒன்றிலே வாழ்ந்திருப்பேன்
கண்மணியே