
அழகு நீ
அறிவு நீ
என் ஆற்றல் நீ
நீ தானே
அண்டம் நீ
அகிலம் நீ
என் உலகம் நீ
நீ தானே
சோகம் நீ
சிரிப்பு நீ
என் உணர்வு நீ
நீதானே
காதல் நீ
காயம் நீ
என் உயிரும் நீ
நீதானே
தேசம் நீ
சுவாசம் நீ
என் வாழ்வும் நீ
நீ தானே
தூக்கம் நீ
விடியல் நீ
என் கனவும் நீ
நீ தானே
எண்ணம் நீ
எழுத்து நீ
என் கவிதை நீ
நீ தானே
நாளம் நீ
நாடி நீ
என் உதிரம் நீ
நீ தானே
கண்கள் நீ
கரங்கள் நீ
என் நினைவுகள் நீ
நீ தானே
என் கண் தேடிய முதல் சித்திரம் நீ
நான் பேச எண்ணிய முதல் விசித்திரம் நீ
நீ தானே
வார்த்தைகள் நான் கோர்த்து
வலை வீச துணிந்த முதல் விண்மீன் நீ
நீ தானே
காணும் இடமெல்லாம் தோன்றிய காணல் நீ
நிற்கும் இடமெல்லாம் வீசிய தென்றல் நீ
என் கனவுக்குள் நான் கண்ட முதற்கனவு நீ
நீ தானே
என்னை தொல்லை என்பார்கள்
என்னை பைத்தியம் என்பார்கள்
காரணம் நீ
என் தேவதை நீ
நீ தானே
என் அமைதியை கேட்டுப்பார்
அது பேசும் மொழி நீ
அது எண்ணிய கவிதையெல்லாம் நீ
அதன் உயிர்மூச்சு நீ
நீ தானே
கைதி நான்
என் சிறை நீ
விடுதலை கிடைத்தாலும்
நான் தேடி ஓடி வரும் என் முதல் சிறை நீ
நீ தானே
நான் குதிக்க எண்ணும் பள்ளத்தாக்கு நீ
நான் குளிக்க எண்ணும் அடைமழை நீ
நான் சிக்கிக் கொள்ள எண்ணும் பெரும்புயல் நீ
நான் முங்கிக் கொள்ள எண்ணும் ஆழிப்பேரலை நீ
நீ தானே
மேகக் கூட்டங்கள் போல் இலக்கற்று திரிந்த என் வாழ்வை
சுடர்விளக்கேற்றி உன்னையே சுற்றி வரும் படி செய்பள் நீ
நீ தானே
உல்லாச படகில் உலகம் சுற்றிக் கொண்டிருந்த என்னை
ஊரடங்கு செய்து உன் நினைவே உலகமென வாழ வைப்பவள் நீ
நீ தானே
நிலவின் ஒளி என் அறையின் இருளை போக்குவது போல
என் அகத்தின் இருளைப் போக்கும் அருள் ஒளி நீ
நீ தானே
என் நவம்பர் மாத மழை நீ
என் மொட்டை மாடி நிலவு நீ
என் கனவில் வரும் கண்கள் மூடிய புத்தர் சிலை நீ
நீ தானே
என் பாசப்படர் நீ
என் இதய ஒலி நீ
என் ஆசை அகல் நீ
நீ தானே
நான் கரம் பிடிக்க
கட்டி அணைக்க
காலம் எண்ணி காத்திருக்கும்
காதல் காரிகை நீ
நீ தானே
பிரம்மனிடம் மனு கொடுப்பேன்
ஈசனிடம் வரம் கேட்பேன்
ஆயுள் வரை அன்று
ஏழேழு பிறவியும் என்று
என் மனைவியாக நீ மட்டும் தான் வேண்டும் என்று
அது ஒன்று மட்டும் போதும் இன்று
ஏனென்றால் என் வாழ்வின் உயிர்நாடி நீ
நீ தானே