Design a site like this with WordPress.com
Get started

என் எதிர்கால மனைவிக்கு.!!

இந்த உலகத்துல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருக்காங்க. ஆனா அதுல ஒன்னு நமக்கு கிடைக்குமானுதான் இங்க நிறைய பசங்களுக்கு பயமே.

நான் எப்பவுமே பொண்ணுங்களோட தோல் நிறத்த வச்சி அவங்க அழகா இல்லையானு மதிப்பிடுறதில்லங்க. ஒரு காலத்துல நான் அப்படி இருந்துருக்கலாம்…தெரியல.But I realized that is not the reality as time passed by. ஆனா ஒன்னு பொண்ணு வெள்ளையா இருந்தாலும், அந்த பொண்ணோட Character சரி இல்லனா, அவ அழகா தெரியிறது கொஞ்ச கொஞ்சமா நின்னுரும்ங்க. நிறத்தோட அழகு முதல் தடவ பாக்குறப்ப அழகா தெரியலாம். ஆனா உள்ளத்தோட அழகு ஒவ்வொரு தடவ பாக்குறப்பயும் அவ அழக கூட்டிக் கிட்டே போகும். எனக்கு உள்ளத்தோட அழகு மேலதான் நிறைய நம்பிக்கை.

நான் இந்த கவிதைல, பாட்டுல வர மாதிரி உங்கள ஏழேழு ஜென்மமும் Love பண்ணுவன், நெனச்சிட்டே இருப்பென், அப்புடினுலாம் கதை சொல்ல மாட்டேன். ஆனா ஒன்னு உங்க உயிர் இந்த பூமில இருக்கிற வர மட்டும் இல்லாம, என் உயிர் இந்த பூமில இருக்குற வரைக்கும் உங்க ஒருத்தர மட்டும் தான் என் உயிரா நெனச்சுட்டு இருப்பேன்.

எனக்கு எந்த Restrictionsஓ இல்ல Conditionsஓ எதுமே இல்ல உங்க கிட்ட கேக்க. உங்க சின்ன வயசுல இருந்து நீங்க ஒரு கனவு வச்சிருந்திற்பீங்கள நான் இப்படி ஆகனும், நான் அப்படி ஆகனும், நான் இப்படி வாழனும், நான் அப்படி வாழனும்னு, நீங்க என் கிட்ட சொல்லுங்க எப்படி வாழனும்னு என்னால முடிஞ்ச வர, என் இறுதி மூச்சு இருக்குற வர, உங்கள நான் உங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ வைக்க டிரை பண்றன்…பண்ணுவேன்.

நீங்க என் மனைவியா வந்தா உங்களுக்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார்ங்க. ஏன்னு கேக்குரிங்களா? என்ன பாத்துக்க என் வீட்ல என் அம்மா இருப்பாங்க என் அப்பா இருப்பாங்க. ஆனா நீங்க என் ஒருத்தன நம்பி தான என் வீட்டுக்கு வறிங்க‌. இவன் நம்மல எந்த ஒரு நிலமைலயும் உடைஞ்சு போக விட மாட்டான். நம்ம கைய கெட்டியா புடிச்சிகிட்டு, நம்மல அவன் கைல தாங்கிக்கிட்டு, நல்லா பாத்துப்பான்னு. அந்த ஒரு நம்பிக்கைல தான. அதுக்காக என் அப்பா அம்மா உங்கள பாத்துக்க மாட்டாங்கனு சொல்லல. அவங்க உங்கள தன் பொண்ணு மாதிரி பாத்துப்பாங்க, அது வேற விஷயம்‌. ஆனா நீங்க என் வீட்டுக்கு வறது, என்னை முதன்மையா நம்பி தான‌. அதான் இத சொல்றன்‌.

அப்பறம் ஒரு விஷயம், எப்பவாவது உங்களுக்கும் என் அம்மாக்கும் எதா ஒரு சின்ன பிரச்சினை வந்துச்சினா கூட. நான் உங்க sideம் கிடையாது என் அம்மா sideம் கிடையாது. ரெண்டு பேர் கிட்டையும் தனியா பேசி பிரச்சினைய புரிஞ்சிக்கிட்டு, நான் ரெண்டு பேர் கால் லயும் விழுந்துர்வன் ஓபனா,… நிறுத்துங்கன்னு. ஏன்னா எனக்கு ரெண்டு பேரும் முக்கியம். இத நான் இப்பவே சொல்லிற்றென்.

நீங்க என் மனைவி ஆயிட்டா உங்க அப்பாவும் அம்மாவும் எனக்கு அப்பா அம்மா மாதிரி தான். அதனால அவங்கள பத்துன கவலைய அதோட நீங்க மறந்துடுங்க. அத என் கிட்ட விட்டுருங்க. அவங்களோட சந்தோஷம் சோகத்தை பகிர்ந்துகர்துல மொத ஆளா உங்களுக்கு முன்னாடி நான் நிப்பென்.

நீங்க ஒரு வேல யாரயா Love பண்ணிர்கலாம். நானும் பண்ணிர்கலாம் இல்லனு சொல்லல. நீங்க உங்க time எடுத்துக்கங்க என்ன Love பண்ண. ஆனா நான் உங்கள அணு அணு வா Love பண்ணுவேன். நீங்க பண்ற சின்ன சின்ன சுட்டித் தனமான விஷயங்களையும். உங்க சிரிப்ப Love பண்ணுவேன்..உங்க நடைய Love பண்ணுவேன்..இதோ இந்த கண்கள Love பண்ணுவேன்…Atom by Atom…Molecule by Molecule..from your Zero to infinity…everything..என்னா நீங்க என் உயிர் ஆச்சே இல்லாமயா.

என் மனசுக்கு எப்பவாவது வலி வந்தா…நான் ஓடி வர முதல் ஆள் என் அம்மா தான்..இதுக்கு அப்புறம் அது ரெண்டு பேரா மாறிடும். நான் என்னிக்காவது தெரியாம எதோ ஒரு வலில உங்கள திட்டிட்டனா என்ன மன்னிச்சிருங்க எதையும் பாக்காம. ஏன்னா நான் அந்த மாறி type கிடையாது, ஆனால் ஒரு வேலை நடந்தால்…அதான் உங்க கிட்ட இப்பவே முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கிறன்…சாரி.

ஒன்னு சொல்லிக்கிறேன் உங்க கண்ணுல இருந்து வர கண்ணீர் என் உடம்புல இருந்து வர இரத்ததுக்கு சமமா நான் பார்ப்பேன். I will give as much attention as I can towards stopping your tears from shedding, than my own blood shedding from my body. The only time you will cry is when I shed my blood. That I will make it impossible in this lifetime of mine

பொண்ணா பொறந்தா வலிகள் அனுபவிச்சு தான் ஆகனும்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க எதையும் தனியா அனுபவிக்க நான் விட மாட்டேன். என் தோள் இருக்கு உங்கள தாங்க, என் இதயம் இருக்கு உங்க வலிகள பகிற. என்னிக்குமே எதுக்குமே எப்பவுமே நான் இருக்கேன் நீங்க சாஞ்சிக்க. உங்க உயிரோட பாதியா உங்க இதயம் செல்லும் வீதியா உங்களோட மீதியா என்னிக்குமே உங்கள நிம்மதியா வச்சிப்பேன். 

நான் சொல்லனும்னா சொல்லிக்கிட்டே இருப்பேன், நீங்க யோசிச்சி சொல்லுங்க. நான் எப்படி இருக்கனும்னு.

Advertisement

Published by @ The Emotional Ink !!

Aspiring Writer with an Emotional Heart who is basically asusual an Engineer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: