
அவள் !!
தைத் திங்கள் ஒரு நாள் கண்டேன்
அக்காரிகையை !!
இறக்கை இல்லா தேவதையை !!
புதிதாய் பூத்த பூ போல !!
அதிகாலை உதித்த சூரியனைப் போல !!
அந்தி மாலை செந்நிர கடலினைப் போல !!
பௌர்ணமி நிலவைப் போல !!
மழழையின் சிரிப்பைப் போல !!
வியப்பூட்டும் அழகாய் இருந்தாள் அவள் !!
நிலவிடம் காதலினைப் பற்றி கூறி புலம்புவோருண்டு !!
அந்நிலவையே காதலித்தவனை கண்டதுண்டா !!
தேய்பிறையாய் இருந்த என்னை ஒரே பார்வையில் வளர்பிறையாக்கினாள் அவள் !!
பக்தி மானாய் இருந்த என்னை சக்திமானாக்கினாள் அவள் !!
பூஜ்யமாய் இருந்த என்னை ராஜ்யம் ஆளும் திறன் கொள்ள வைத்தாள் அவள் !!
சகஜமாய் பழகும் என்னை சங்கோஜ பட வைத்தாள் அவள் !!
கண்ட நாள் முதல் அவளை காண எண்ண துடிக்காத நாள் இல்லை !!
அவளைக் கண்ட நொடி ஏனோ நான் !!
அவளை பித்து போல் பின் தொடர்ந்தேன் !!
குயிலிசையை கேட்ட பறவை பார்வையாளனைப் போல !!
மழைத்துளியைக் கண்ட மழழையைப் போல !!
இரவெல்லாம் கனா !!
கனாவெள்ளாம் அவள் !!
என்னிடம் அத்தேவதை தன் செவ்விதலால் !!
செந்தேன் போன்ற குரலால் !!
செந்தமிழில் !!
என்னுடன் உரையாடி !!
என் கள்ளங்கபடமற்ற இதயத்திற்கு இனிமையூட்ட மாட்டாளா !!
வண்ணத் திருவிழாவில் !!
அவள் பூசிய வண்ணம் !!
என் முகத்தில் மட்டுமல்ல !!
என் இதயத்திலும் ஓவியமானது !!
பெண்ணே !!
ஓர் நாள் !!
அந்தி மழை பொழிந்தது !!
ஒவ்வொரு துளியிலும் !!
உன் முகம் தெரிந்தது !!
என் அகம் திறந்தது !!
பார்த்தேன் உன்னை !!
மறந்தேன் என்னை !!
மிதந்தேன் காற்றில் !!
பறந்தேன் விண்ணில் !!
நடந்தோம் மண்ணில் !!
இரு உயிராய் !!
ஓர் குடையில் !!
நனைத்தேன் !!
குடை இருந்தும் !!
காதல் மழையில் !!
நான் உன் கண்ணில் !!
நீ எண்ணில் !!
விழுந்தேன் தன்னில் !!
உன்னில் !!
உன் நிலவாய் உனை சுற்றி வர ஆசை !!
உன் நிலழாய் உனை பின் தொடர ஆசை !!
உன் நினைவாய் உன் மனதில் என்றும் வலம் வர ஆசை !!
உன் நிஜமாய் என்றும் உன் அருகினிலே வாழ ஆசை !!
உன் நடனத்தை மெருகேற்றும் நலினமாக !!
உன் பாடல்களை இனிமையாக்கும் குரல்வளமாக !!
உன் எழில் மிகு பேச்சில் வரும் நகைச்சுவையாக !!
உன் மனதை உற்சாகமாக்கும் மழைத்துளியாக !!
உன் பால் போன்ற மேனியின் மேல் செம்பூவாக !!
உனை இனிமையாக்க !! உனை முழுமையாக்க !!
நீ எந்தன் பாதியாய் !!
நான் உந்தன் மீதியாய் மாற ஆசை !!
அன்பே !
சூரியன் அக்கடலை பிரகாசிப்பது போல் நான் உனை பிரகாசிப்பேன் விடியலாய் !!
மீண்டும் அச்சூரியன் அக்கடலில் மறைவது போல் உன்னுள் நான் சேர்வேன் அந்தி மாலையாய் !!
ஆருயிரே!
அவ்வசந்த கால காலை
அழகாய் இருக்கும் நீ அணிந்த பட்டு சேலை
உன் தோலில் விழும் என் மாலை
அந்த மண்டபம் இருக்கும் சாலை
எங்கெங்கும் உருவாகும் சோலை
விரிப்போம் அனைவருக்கும் வாழை
ஊற்றுவோம் நம் பெற்றோர் மனதில் பாலை !!
பிறக்கும் நமக்கொரு காளை !! நாளை !!
வெண்ணிலவு பொட்டழகி !!
என் உயிர் நோகுமடி !!
நீ இல்லாவிட்டால் !!
நீ இருக்கும் போது என் வாழ்வு சொர்க்கமே !!
நீ எனை விட்டுச் சென்றால் என் வாழ்வும் ஆகுமடி நரகமே !!
உனை காணும் போதெல்லாம் ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து வந்து உன் பேர சொல்லி சொல்லி பாடலாய் ஓலிக்குதடி !!
மயிலாஞ்சியே !
ஓர் தோழியாக !!
ஓர் காதலியாக !!
ஓர் மனைவியாக !!
என்னுடைய மறு பாதியாக !!
என்றும் உறுதுணையாக !!
என்னுடன் இரு !!
அது போதும் !!
என் வாழ்வை மொத்தம் நான் கொள்ள !!
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது !!